Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, April 09, 2018

உயிர் உள்ளவரை உன் நினைவிருக்கும் பாகம் 06 - இத்தாலி தனு !

Currently online
பாரீஸ் வந்தும் ஒரு சில நாட்கள் நிலவன் நினைவு வந்து மீண்டன. 

ஆனால் இனி கடந்த காலம் ஏதும் நினைவில் வேண்டாம் என்று நினைத்தவள் கிடைத்த வாழ்க்கையை சந்தோசமாக வாழவேண்டும் என்று மனதை திடப்படுத்திக்கொண்டாள்.

வெளிநாடு அறியாத முகங்கள், தெரியாத மொழி, பேச பழக மனிதர்கள் இல்லை .நான்கு சுவர்களுக்குள் அவள் வாழ்க்கை நரகமாக போகும் என்று அவள் நினைக்கவே இல்லை. 

எவ்வளவோ செல்லமாக வளர்ந்தவள், படிப்பை முடித்துவிட்டு உல்லாசமாக வேலைக்குப் போய் பெற்றவர்களுடன் சுதந்திரமாக வாழ்ந்தவள், இப்போ கூண்டுக்குள் அடைக்கப்பட்ட பறவை போல வாழ்க்கையை உணர்ந்தாள்.

நிவேதாவின் கணவன் அவளை ஒரு வேலைக்காரி போலவே பார்த்தான். அவள் வந்த நாட்களில் இருந்து அவன் வீட்டுக்கு வருவதும் குறைத்துக் கொண்டான். அப்படி வந்தாலும் நிவேதா கேட்டால் ..

நீ ஏன் கேட்கிறாய்? உனக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை .உன்னை ஒண்டும் ஆசைப்பட்டு நான் திருமணம் செய்யவில்லை.

என் குடும்பத்தினரின் விருப்பத்துக்காகத் தான் செய்தேன் என்று கோபமாக திட்டுவது மட்டுமல்ல அதிகம் குடித்து விட்டு அடிக்கவும் செய்தான். 

அவனுக்கு நிவேதாவை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அவளை அதிகம் துன்புறுத்தினான். 

இதை அறியாத அவள் கணவன் திருந்திடுவான் என நம்பி பல போராட்டத்திலும் வேதனைகள் நடுவிலும் வாழ்ந்தாள். 

சந்தோசமாய் வாழ வந்தவளுக்கு நின்மதி கூட கிடைக்கவில்லை. இப்படியே ஓர் ஆண்டுகள் வலிகளுடன் நகர நிவேதாவுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. 

குழந்தைக்காக மனம் மாறுவான் என்று நினைத்தவளுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. அவன் வீட்டுப் பக்கம் வருவதையே குறைத்துக்கொண்டான். வந்தாலும் குடித்து விட்டு வந்து நிவாதாவை அடித்து கொடுமைப்படுத்துவான். 

அவளுக்கு அங்கு உறவென்று யாரும் இல்லை. பெற்றோருக்கு தெரிந்தால் இதை தாங்க மாட்டர்கள் என நினைத்தவள் தனக்குள்ளே புதைத்தாள்.

இதுவரை வீட்டுக்குள் முடங்கி கிடந்தவள் தன் தேவைகளுக்காக வெளியே போகவேண்டிய நேரங்கள் வரவும் வெளி உலகமும் கொஞ்சம் தெரியத் தொடங்கியது.

வெளியே செல்லவும் சில நண்பர்கள் மூலம் நிவேதாவின் கணவனின் உண்மைகள் தெரியவந்தது. 

அவளால் அதை தாங்கவே முடியவில்லை. நிமல் முன்பே பாரீஸ் பெண்ணை திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு பிள்ளையும் இருப்பதாகவும், அவர்கள் சந்தோசமாக வாழ்வதாகவும் இதை யாருக்கும் சொல்லாமல் பெற்றோருக்காக தமிழ் பெண்ணை திருமணம் செய்ததாகவும் நிவேதாவை விவாகரத்து செய்து விட்டு தன் முதல் மனைவியை சட்டப்படி திருமணம் செய்ய இருப்பதாகவும் அறிந்தாள். 

அதனால் நிமல் இனி தேவையே இல்லை அவனிடம் இனியும் ஏன் அடிவாங்க வேண்டும் என்று நினைத்தவள் அவனுக்கு விவாகரத்து கொடுத்து 

விட்டு தன் பிள்ளைக்காக தான் வாழ வேண்டும் என்று முடிவெடுத்தாள். கணவனை விட்டு நிரந்தரமாக பிரிந்தாள்.

ஆனாலும் தனியே இருப்பதும் போராட்டமாகவே இருந்தது. 

கேலி பேசுபவர்களும் தப்பான நோக்கத்தோடு பார்ப்பவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். நிவேதா வேலைக்குச் சென்றவாறே பிள்ளையை கவனித்து வந்தாள். 

அவளின் உலகமே அந்த குழந்தை தான். 

வருடம் இரண்டு ஆனது நிவேதாவின்பெற்றோரும் நாட்டில் நடந்த போரில் இறந்து விட்டனர். 

அவளுக்கு உறவென்றால் ஒரு சில நண்பர்கள் தான் இருந்தார்கள். 

நிவேதா நிலமை அறிந்த சிலர் அவளை திருமணம் செய்யகேட்டபோது அவள் மறுத்து விட்டாள். 

அவள் பர்வையில் ஒட்டுமொத்த ஆண் சமுதாயமே கெட்டவர்களாகதான் தெரிந்தார்கள்.

ஆனால் உதயன் மட்டும் எப்படி நிவேதா பார்வையில் விதி விலக்கானான்!?

தொடரும்........!!

உயிர் உள்ளவரை உன் நினைவிருக்கும் பாகம் 01 - http://www.yarlitrnews.com/2018/03/blog-post_393.html

உயிர் உள்ளவரை உன் நினைவிருக்கும் பாகம் 02 - http://www.yarlitrnews.com/2018/03/blog-post_600.html

உயிர் உள்ளவரை உன் நினைவிருக்கும் பாகம் 03 - http://www.yarlitrnews.com/2018/04/03.html

உயிர் உள்ளவரை உன் நினைவிருக்கும் பாகம் 04 - http://www.yarlitrnews.com/2018/04/04.html

உயிர் உள்ளவரை உன் நினைவிருக்கும் பாகம் 05 -http://www.yarlitrnews.com/2018/04/05_5.html
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.