Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, April 10, 2018

உயிர் உள்ளவரை உன் நினைவிருக்கும் பாகம் 07 - இத்தாலி தனு !

Currently online
சில நேரம் பார்க்க முடியாத உறவுகளுக்கு பாசம் அதிகம் என்று சொல்வார்களே அப்படி இருக்குமோ?

ஓய்வு நேரங்களில் எல்லோரும் போல நிவேதாவும் முகநூல் பார்ப்பது வழமை. பொழுது போகவில்லை என்றால் கவிதை கதைகள் படிப்பாள். 

அப்படி அவள் முக நூலில் கிடைத்த நண்பன் தான் உதயன். முதலில் அவனையும் வெறுத்தவள் நாளடைவில் அவன் பழக்க வழக்கங்கள், பெண் என்ற ஒரு மரியாதை, பேச்சில் பணிவு எல்லாம் பிடித்துப்போக இருவரும் நல்ல நண்பர்களானார்கள்.

இணையம் கொடுத்த இனிய நட்பு தான் உதயன். அன்புடனும் பண்புடனும் பழகுவதில் இனியவன். மனம் விட்டு பேசவும் அவள் சோகங்களை பகிரவும் சிரிக்கும் போது சிரிக்கவும் அழும் போது ஆறுதல் சொல்லவும் நிவேதாவின் அம்மாவுக்கு பின்னர் அவன் தான் இருந்தான்.

உதயன் நகைச்சுவையாக பேசும் போது அவளுக்கு கவலைகள் மறந்து போகும். சொல்லப்போனால் நிவேதா பாரிஸ் வந்ததின் பின்னர் சிரித்த நாட்கள் அவன் நட்பு கிடைத்ததின் பின்புதான். அவள் வலிகளை கூட வெற்றிப்படிகள் ஆக்கவும் அவன் நட்பால் மட்டுமே முடிந்தது.

நிவேதா போலவே அவள் குழந்தை மீதும் அக்கறை எடுத்து அன்புடன் நேசித்தான்.

அக்கரையில் ஒருவர் இக்கரையில் ஒருவர் ஆனாலும் அன்பு மட்டும் இணைந்தே இருந்தது.

அன்று நிவேதா வேலைக்கு போகவில்லை நன்றாக தூங்கிக்கொண்டிருந்தவள் தொலைபேசி அழைப்பின் சத்தம் கேட்டு கண் விழித்துப் பார்த்தாள்.

உதயன் தான் அழைப்பில்.
"குட் மோர்னிங் நிவேதா
எப்படி சுகம்?
என்ன வேலையா? ஏன் பேசவில்லை" என்றான்.

"குட் மோர்னிங் உதய்
எனக்கு காய்ச்சல் என்று மெதுவாக அனுங்கினாள்".

உதயனுக்கு அவள் பேசுவதை கேட்டதும் கவலையாக இருந்தது . பாவம் உதவிக்கு என்று யாரும் இல்லாமல் தனிமையில் வாழ்கிறாள் என்று வருந்தியவன் காய்ச்சலுக்கு மருந்து ஏதும் குடிச்சியா? சாப்பிட்டியா நிவே எண்டவன் சற்றும் யோசிக்காமல் நான் உன்னிடம் ஒன்று கேக்கலாமா? எது என்றாலும் நினைத்துக்கொள் என்றவன் தாமதிக்காது கேட்டான்.

நாம் ஏன் காதலிக்க கூடாது? எனக்குஉன்னை திருமணம் செய்ய விருப்பம்.


நாம் ஏன் காதலிக்க கூடாது? எனக்குஉன்னை திருமணம் செய்ய விருப்பம்.
உன் வாழ்க்கை எல்லாம் தெரியும். 

கடந்த காலம் எதுவும் நினைக்க வேண்டாம் என்று அவனே பேசிக்கொண்டு போனவன் நீ என்ன சொல்கிறாய் நிவே என்றான்.

நிவேதாவுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை. அவனிடம் இருந்து இதை அவள் எதிர் பார்க்கவில்லை உதயன் நல்லவன் ஆனால் ஏன் இப்படி பேசுறான்..? 

சிலநேரம் என் தவறு ஏதும் இருக்குமா என நினைத்தவள் ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்கள்? 

இனி இப்படி பேசினால் நான் பேசமாட்டேன் என்று தொலைபேசியை துண்டித்தாள்.

உதயன் தான் அவசர பட்டு தனது விருப்பத்தை சொல்லி அவளை கோபப்பட வைத்துவிட்டேனோ? அதை அவள் தப்பாக நினைத்து விட்டாளோ? என நினைத்தவன் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல முறைமுயற்சி செய்தும் பயன் இல்லை.

நிவேதாவுக்கு கோவம் வந்து விட்டது போல. 

நான் ஏன் இப்படி செய்தேன்? அவள் கஸ்ரப்படுவதை என்னால் தாங்க முடியவில்லை இதை அவள் உணர்வாளா இல்லை இனி பேசாமலே விட்டு விடுவாளா என்று புலம்பினான் உதயன்.

இரண்டு நாட்கள் அவன் தொடர்பு கொண்டபோதும் நிவேதா பேசவில்லை. மறு நாள் காலை அவளே அழைத்தாள். 

அவள் என்ன பேசுவது என்று தெரியாமல் தவித்தாள். அவளால் உதயன் மீது கோவப்பட கூட முடியவில்லை. எப்படி சொல்வது அவனுடன் பேசாத அந்த நாட்கள் அவள் அனாதை என்று உணர்ந்ததை. 

உன்னுடன் பேசாமல் இருக்க முடியாது நீ வேண்டும் எனக்கு நல்ல உறவாக உன் அன்பு வேண்டும் என்று சொல்லலாமா என்று ஏதேதோ நினைத்தவள்....
எப்படி இருக்கிறாய் உதய் என்றாள்....?

தொடரும் ........!

உயிர் உள்ளவரை உன் நினைவிருக்கும் பாகம் 01 - http://www.yarlitrnews.com/2018/03/blog-post_393.html

உயிர் உள்ளவரை உன் நினைவிருக்கும் பாகம் 02 - http://www.yarlitrnews.com/2018/03/blog-post_600.html

உயிர் உள்ளவரை உன் நினைவிருக்கும் பாகம் 03 - http://www.yarlitrnews.com/2018/04/03.html

உயிர் உள்ளவரை உன் நினைவிருக்கும் பாகம் 04 - http://www.yarlitrnews.com/2018/04/04.html

உயிர் உள்ளவரை உன் நினைவிருக்கும் பாகம் 05 -http://www.yarlitrnews.com/2018/04/05_5.html

உயிர் உள்ளவரை உன் நினைவிருக்கும் பாகம் 06 -http://www.yarlitrnews.com/2018/04/06_9.html

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.