Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, April 11, 2018

உயிர் உள்ளவரை உன் நினைவிருக்கும் பாகம் 08 - இத்தாலி தனு !

Currently online
எப்படி இருக்கிறாய் உதய் என்றாள்....?

நான் இருக்கிறேன் என்றான் கவலையாக...

உனக்கு சுகமா நிவே என்றான் ..?

ம்ம்ம்...... என்றவளிடம் உனக்கு என்னை பிடிக்கும் தானே. 

நான் ஏதும் தவறாக பேசினால் மன்னித்து விடு நிவே என்றான்.

அப்படி எல்லாம் இல்லை.... என்றவள் இப்பவே உதயனிடம் சொல்லி விடலாம் என்று நினைத்தவள்...

என் வாழ்கை எல்லாம் தெரிந்த நீங்களே என் வாழ்கை எல்லாம் என்னோடு இருந்தால் எனக்கும் சந்தோசம் தான் ஆனால்.......

என்ன ஆனால் நிவே என் மீது நம்பிக்கை இல்லையா....?

அப்படி இல்லை இதை உங்கள் குடுப்பத்தினர் ஏற்பார்களா..? 


இந்த சமுகம் கேலி செய்யாதா என்றவளை ....

சும்மா இரு நிவே நாம் முறைப்படி தானே திருமணம் செய்யப்போகிறோம். 

அம்மா தான் சம்மதிப்பாரோ தெரியாது நான் பேசுறேன் அம்மாவிடம் என்றவன் சரி நிவே எனக்கு வேலை நாளைக்கு பேசுறேன் என்று தொலைபேசியை துண்டித்தான்.

இருவருக்கும் முன்பை விட அன்பும் அக்கறையும் அதிகமானது....

நிவேதாவுக்கு புது உலகம், புது வாழ்கை என்று சந்தோச வானில் பறந்தாள். மொத்த வலியும் ஒற்றை நொடியில் மறந்தாள் அதற்கு காரணம் உதயன்.

இரவுகள் எல்லாம் பகலாகி போக இன்பக் கனவில் மிதந்தவளுக்கு மீண்டும் ஒரு புயல் வந்து அவள் வாழ்வில் மையம் கொள்ளும் என்று நினைக்கவில்லை.

கொள்ளை அன்பு கொட்டி கொடுத்தவன் கொஞ்சமாக விலக தொடங்கினான்.
இடை விடாது பேசியவன் ஏனோ அளவாக பேசவும் செய்தான். நிவேதாவால் அதை தாங்க முடியவில்லை.

அவனுடன் பேசாமல் இருக்கும் நொடிகள் எல்லாம் உயிர் போகும் வலி அவளுக்கு. அவள் காரணம் கேட்டால் அவன் சொல்லும் பதில் வேலை நேரமில்லை.

வெளிநாட்டு வாழ்க்கை நன்றாக தெரிந்தவள் இங்கு வேலை தானே முதலிடம் என்று உணர்ந்தவள். ஆனாலும் இரண்டு நிமிடம் பேசலாம் தானே உதயன் ஏன் இப்படி இருக்கிறான் ? என்னை பிடிக்காமல் வெறுக்கிறானா ?என்று நினைத்தவள் சில நேரம் வேலையாக இருக்க கூடும் என்று மனதை தேற்றினாள்.

என்ன தான் ஆறுதல் சொன்னாலும் அவள் மனதை சமாதானம் செய்ய அவளால் முடியாமல் உதயனிடம் கேட்டாள்....

"உதய் நீங்கள் முதல் போல இல்லை ரொம்ப மாறிட்டிங்க ஏன் எண்டு நான் தெரிந்து கொள்ளலாமா ....?"என்றாள் மெதுவாக..

அப்படி எல்லாம் இல்லை நிவே நான் எப்போதும் போல தான் இருக்கிறேன் என்று சொல்லும் போது ஆயிரம் வலிகள் அவனுள். 

உதயன் வலிகளை அவன் பேச்சில் கண்டு கொண்ட நிவேதா அதற்கு பின்னர் ஏதும் கேட்கவில்லை.

எப்படி சொல்வது நிவேதாவிடம் என் மனதில் உள்ள வலியை. 

எனக்காக காத்திருக்கும் அவளுக்கு நான் தரப்போகும் ஏமாற்றத்தை. 


அவள் காயத்துக்கு மருந்தாக இருந்து விட்டு மறுபடியும் ரணமாக்கினால் அவள் இதயம் தாங்குமா...?

 புது வாழ்க்கை புது உறவு என்றும் தன் வாழ்க்கையை எப்படி வாழலாம் என்று எண்ணங்களில் கோட்டை கட்டி வாழ்பவளுக்கு எப்படி சொல்வது உன் எண்ணம் எல்லாம் மண்ணோடு மண்ணாக போகிறது என்பதை.. 

உதயன் அம்மா சொன்னதை நினைத்து பார்த்தான்... 

அவன் கண்கள் கலங்கியது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.