Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, April 12, 2018

உயிர் உள்ளவரை உன் நினைவிருக்கும் பாகம் 09 - இத்தாலி தனு !

Currently online
அன்று உதயன் பிறந்தநாள்..

காலை வேளை தொலைபேசி சத்தம் கேட்டது எடுத்து "ஹலோ " என்றான் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி. 

நீ சந்தோசமாய் இருக்க வேண்டும் என்றார் மறு முனையில் அம்மா.

அம்மாவின் ஆசிர்வாதம் கிடைத்த மகிழ்சி உதயனுக்கு. வழமை போல எல்லோர் நலனும் விசாரித்தான் எல்லோரும் சுகம் தம்பி. ஆமா நீ எவ்வளவு நாள் தனிய வாழுறது எனக்கும் வயது வந்து விட்டது . 

இப்போ எல்லாம் உடம்பு முடியுது இல்லை தம்பி ஒரே வருத்தம். நான் உயிருடன் இருக்கும் போது உனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற அம்மாவிடம் செய்யலாம் அம்மா அதுக்கு இப்போ என்ன அவசரம் என்று சிரித்தான்....

உனக்கு எல்லாம் சிரிப்பு தான் என்று செல்லமாக கோபித்து கொண்டாள் அம்மா.

ஆமா அம்மா நான் ஒன்று கேக்கலாமா என்று தன் மனதுக்குள் இருப்பதை யாடையாக கேட்க்கும் எண்ணத்தோடு.

"என்ன தம்பி கேளன் ....."

திருமணமாகி விவாகரத்து பெற்றவர்களை மறு மணம் செய்வது தவறா அம்மா..?

"இப்போ ஏன் இந்த கேள்வி கேட்கிறாய் என்ன அவசியம்?" என்றாள்.
"சும்மா தான் சொல்லு மா" என்றான்..

"ஓம் செய்யலாம் தானே இப்போ காலம் மாறி போட்டுது . எல்லோருக்கும் ஒரு அன்பும் ஆதரவும் தேவை தானே. 

எத்தனையோ பெண்கள் அவர்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டு கஸ்ரப்படுகிறார்கள் அவர்களுக்கும் வாழ ஆசை தானே அதனால் தப்பில்லை" என்றதும் அம்மாவிடம் கேட்டு விடலாம் என்று நினைத்தவன்..

அப்போ நான் திருமணமான ஒரு பெண்ணை திருமணம் செய்தால் ஏற்றுக்கொள்ளுவிங்களா அம்மா?" என்றான் பயத்துடன்.

அம்மாவுக்கு கோவம் வந்தது;

 "உன் விளையாட்டுக்கு அளவே இல்லையா ...?"

உண்மையாக கேட்கிறேன்..  எனக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கு மா பாவம் அவள திருமணம் செய்தால் நான் நல்லாய் இருப்பேன் என்றதும் அம்மாவுக்கு பல மடங்கு கோபம் வரவும் உதயன் பிறந்த நாள் என்றும் பார்க்காமல் திட்டி தீர்த்தாள்.

"அப்போ உனக்கு நீ பொண்ணு பாத்திட்டியா? 

நாங்கள் ஏன் இருக்கிறம்?. 

அதுகும் திருமணமானவளா ? 

சனம் என்ன சொல்லும். 

நாங்கள் ஊருக்குள்ள தலை நிமிர்து வாழ முடியுமா? உனக்கு பிடித்தவளை திருமணம்செய்தால் எங்களை மறந்திடு. 

நாங்கள் செத்துட்டோம் என்று நினைத்துக்கொள். 


அம்மா அப்பா சகோதரம் வேணும் என்றால் நாங்கள் பார்க்கின்ற பெண்ணை திருமணம் செய்துகொள்" என்று கோவமாக தொலைபேசியை துண்டித்தாள் அம்மா.

அம்மா இப்படி திட்டுவா என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. 
எதுக்கு இவ்வளவு கோபம்..


அப்படி என்ன தவறு செய்து விட்டேன்.?

 யாரும் திருமணம் செய்யலாம் ஆனால் நான் செய்தால் தவறா? 

அம்மாவை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று வருத்தப்பட்டான். நிவேதா இல்லாத வாழ்க்கையை அவனால் நினைத்து பார்க்க கூட முடியவில்லை. 

நான் அவளுடன் இல்லை என்றால் என்ன ஆவாளோ என்ற பயம் உதயனுக்கு. 
நிவேதாவை திருமணம் செய்ய அவன் அம்மாவுடன் எவ்வளவு போராடியும் பயன் இல்லை. இதை எப்படி அவளிடம் சொல்வது. 

அவள் உலகமே நான் என்று அடிக்கடி சொல்வாளே இந்த ஏமாற்றம் எவ்வளவு வலிக்கும் என்று எண்ணித்தான் சிறிது சிறிதாக விலகத் தொடங்கினான். 

நான் விலகினால் என்னை வெறுத்து சந்தோசமாக வாழுவாள் என்ற நம்பிக்கை உதயன் எண்ணத்தில். 

இது புரியாத நிவேதா அப்பாவியாக ஏன் பேசவில்லை என்று கேட்கும் நேரம் எல்லாம் பேச வார்த்தையின்றி ஊமையாகி அழுதே விடுவான்.

உயிர் உள்ளவரை உன் நினைவிருக்கும் பாகம் 01 - http://www.yarlitrnews.com/2018/03/blog-post_393.html

உயிர் உள்ளவரை உன் நினைவிருக்கும் பாகம் 02 - http://www.yarlitrnews.com/2018/03/blog-post_600.html

உயிர் உள்ளவரை உன் நினைவிருக்கும் பாகம் 03 - http://www.yarlitrnews.com/2018/04/03.html

உயிர் உள்ளவரை உன் நினைவிருக்கும் பாகம் 04 - http://www.yarlitrnews.com/2018/04/04.html

உயிர் உள்ளவரை உன் நினைவிருக்கும் பாகம் 05 -http://www.yarlitrnews.com/2018/04/05_5.html

உயிர் உள்ளவரை உன் நினைவிருக்கும் பாகம் 06 -http://www.yarlitrnews.com/2018/04/06_9.html

உயிர் உள்ளவரை உன் நினைவிருக்கும் பாகம் 07 - http://www.yarlitrnews.com/2018/04/07.html

உயிர் உள்ளவரை உன் நினைவிருக்கும் பாகம் 08 -http://www.yarlitrnews.com/2018/04/08.html

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.