Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, April 11, 2018

இன்னும் 10 ஆண்டுகளில் கொழும்பு குடிசையில்லா நகராக மாறும் ; பிரதமர்!

Currently online
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களில் குறைவருமானம் பெறும் குடிசைகளிலும், தற்காலிக வீடுகளிலும் வாழும் மக்களுக்காக வீட்டுத்திட்டம் ஒன்றை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக 50,000 வீடுகளை அமைத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அங்கு குடியேற்றவுள்ளதோடு, அடுத்த சில வருடங்களில் இந்த செயற்றிட்டத்தை நிறைவுசெய்ய எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின் இரண்டாம் மூன்றாம் கட்டங்கள் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்படும் பட்சத்தில், கொழும்பில் வீடில்லாப் பிரச்சினைக்கு முழுயான தீர்வு காணப்படுமெனவும், குடிசைகளில் வாழும் மக்களை அந்த வீடுகளில் குடியமர்த்தியப் பின்னர் அந்த இடங்களை வர்த்தக தேவைகளுக்காக பயன்படுத்த முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களை மையமாகக் கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, மூன்று கட்டங்களும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் பட்சத்தில் 10 வருடங்களில் கொழும்பில் உள்ள அனைத்து குடிசை வீடுககளும் அகற்றப்பட்டுவிடும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முதற்கட்டமாக 2023ஆம் ஆண்டுக்குள் 50,000 வீடுகளை அமைத்து குறை வருமானம் பெறும் குடும்பங்களை அங்கு குடியமர்த்த எதிர்ப்பார்ப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.