Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, April 11, 2018

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் (11.04.2018)

Currently online
மேஷம்
சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.   

ரிஷபம்
குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். மனதிற்கு இதமான செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மிதுனம்
நண்பகல் 12மணி  வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து போங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.   

கடகம்
மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. நண்பகல் 12 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனம் தேவைப்படும் நாள். 

சிம்மம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்னைகளை பேசி சுமூகமான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.   

கன்னி
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும்.  உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் ஆதாயமடைவீர்கள். கனவு நனவாகும் நாள். 

துலாம்
கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.  

விருச்சிகம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.    

தனுசு
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கி கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் உதவிகள் கிடைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புதிய பாதை தெரியும் நாள்.  

மகரம்
நண்பகல் 12 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். மாலைப் பொழுதிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.  

கும்பம்
குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வரக்கூடும். நண்பகல் 12 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அதிகம் உழைக்க வேண்டிய நாள்.  

மீனம்
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். இனிமையான நாள்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.