Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, April 10, 2018

16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த 70 வயது முதியவர்!

Currently online
திருகோணமலை அக்போபுர பகுதியில் 16 வயதுடைய சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 70 வயதுடைய நபரொருவரை இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க நேற்றைய தினம் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட குறித்த சந்தேகநபர் சீனிபுர, கந்தளாய் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் சலூன் கடையொன்றை நடத்தி வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய குறித்த சந்தேக நபர் கடந்த 7ஆம் திகதி இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து நேற்றைய தினம் சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.