Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, April 10, 2018

முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது தொடர்பில் முக்கிய அறிவித்தல் !!

Currently online
இம்மாத இறுதியில் இருந்து முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது கட்டாய அமுலுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபை கூறியுள்ளது.

குறித்த சபையின் தலைவர் சிசிர கோதாகொட, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் முச்சக்கர வண்டி சேவையின் தரத்தை மேம்படுத்தல் போன்ற நோக்கங்களுக்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த 01ம் திகதி முதல்  கட்டண மீட்டர் கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற் கொண்டு மேலும் இரண்டு வார காலம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமது சங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.