Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, April 08, 2018

அனாதை_ஆகப்போறம்.....!

Currently online
இப்ப என்ன?
இருபத்தைஞ்சு வயசுதானே
இன்னும் இருக்கெண்டால்
இல்லையெண்டுவன்..

எங்களுக்குத்தாண்டா இருபத்தைஞ்சு
அதுகளுக்கு இப்பவே
அறுவது அறுபத்தைஞ்சு
எப்பிடிப் பாத்தாலும் - இன்னும்
பத்தோ பதினைஞ்சுதான்

அடுத்தடுத்து அதுகள் போக
அனாதையா அழுது நிப்பம்
அட அதுக்கென்ன
மனிசியிருக்கு மகளிருக்கு
மனிசரெண்டா சாவம்தானே
இதெல்லாம் கதை எண்டு
எடுத்து வந்தியோ எண்டால்
இதிலயும் கதையிருக்கு....

காலமை எழும்பி
கழண்ட சறம் கட்ட முன்னம்
அம்மா எண்டுறம்
அவளினிமே இல்லை எண்டால் ??

அரைவாசிப் பேருக்கு
அப்பன்தான் வில்லன்
அடிச்சாலும் பிடிச்சாலும்
அந்தாள்தான் வளத்திச்சு -அட
அடிபாட்டுத் துணைக்கேனும்
அந்த ஆள் இல்லை எண்டால் ??

கேற்றுக்கு இடிச்ச சைக்கிள்
வீட்டுக்க வரமுன்னம்
அம்மா எண்டுவமே
கத்தாமல் வாடா எண்டு
கத்திச் சொல்லுவாளே
அந்தச் சத்தம்
அடங்கி போச்சுதெண்டால்??

ஊருக்க அடிபட்டு
உதவாத பேரெடுத்து
ஊத்தையன் ஆனாலும்
உதுகள் உப்பிடித்தானெண்டு
ஊரில பழிபோட்டு
உன்னை உயத்துற
#உன்ர_அம்மா_இல்லாட்டி ??

பென்சன்
கிளினிக்
பெரிய ஆக்கினை எண்டு
பேசிப் பேசி ஏத்தின அப்பன்
பேசாமப் படுத்தால் ??

கொத்துக் கடையில
கொட்டிட்டு நீ வர
கொட்டக் கொட்ட முழிச்சுக்கொண்டு
குந்தியிருக்கும் மனிசி
அப்பு சாப்பிடன்ரா எண்டு
ஆசையா கேக்க
அரியண்டம் ஆக்கினையெண்டு
அடிச்சமாரி திட்டிவிட்ட
அம்மா கைச்சோறு
இனிமேல் இல்லையெண்டால்??

பொரிச்ச ரண்டு மீனை
பிள்ளைக்கும் புருசனுக்கும்
பிரிச்சுக் குடுத்திட்டு
பசிக்கேல்ல எண்டுற
பைத்தியக்காரி இல்லை எண்டால்??

இனி என்ன மச்சான்
இதுகள் ரண்டும் போக
இஸ்ரத்துக்கு நாங்கள்
இரவில திரியலாம்
என்னவும் பண்ணலாம்
எவனும் கேக்கமாட்டான்

சரி விடு
எல்லாம் போகட்டும்
#என்ன_செய்யலாம் ??

எப்பிடியோ எல்லாரும்
எண்டைக்கோ போறதுதான்
இருக்குற வரைக்கும்
என்னென்ன செய்யலாம்??

தேத்தண்ணி லேற் எண்டால்
தேவையில்லாம திட்டாத..

முதல் மாத சம்பளத்தை
முழுசாக் குடுத்திடு

கடன் ஏதும் இருந்தால்
கட்டி முடிச்சுவிடு

கலியாண நாள் வந்தால்
களையாச் செஞ்சுவிடு

சாப்பிட முன்னம்
சாப்பிட்டியா எண்டு கேளு
ஓம் எண்டு சொன்னாலும்
ஒருவாய் தீத்திவிடு

உழைச்சுக் குடுக்காட்டியும்
ஊர்வம்பைக் குடுக்காத
உள்ளுக்க நெஞ்சிடிச்சு
உயிர்வாழ வைக்காத

அந்தாளோட ஆக்கினையா -அட
அந்தாளும் ஆம்பிளைதானே
அப்பிடித்தான் இருப்பார்
அடங்கித்தான் போய்ப்பாரன்

அப்பா கோலிங் எண்டு
ஆசைக்கும் வராதவனுண்டு
அந்த வலியெல்லாம்
அனுபவிச்சா அழுதிடுவாய்

கிளினிக்கோ
பென்சனோ
பேசாமல் கூட்டிப்போ
கூல்பாருக்கு கூட்டிப்போய்
குளுகுளுண்டு வாங்கிக்குடு
குழுசையைப் போட்டு
கொன்றோலுக்கு கொண்டரலாம்

வெளியில போனாலும்
வீட்டுக்கு போன் பண்ணு

வெளிநாடு போய்ட்டியா ??
வேலை கஸ்ரமா ??
அப்பப்போ கோல் பண்ணி
அம்மா எண்டுபார்
அத்தினையும் மறந்து போகும்

அம்மாவோட ஃபன் ரைட் போ - அட
மனிசி மாட்டன் எண்டும்
மடக்கி ஏத்திப்போ
மனிசியும் என்ஜோய் பண்ணும்

காசியோ ராமேஸ்வரம்
கடைசி நேரம் அனுப்பி வை
ஏதாவது ஒருநாடு
எப்பிடியாச்சும் கூட்டிப்போ
இங்கேயே பிறந்து
இதுக்கையே சாகணுமா ??

இருக்குற காலத்துக்க
இதெல்லாம் செய்துபார்
இல்லாத காலத்திலையும்
ஏதோ நிறைவிருக்கும்.....!


    நன்றி
ஸ்ரீ கோகுல்
Sri Kogul
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.