Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, April 10, 2018

காதலின் வலிகளும் காதலிக்கு வாழ்த்துக்களும்...........!!! சதீஸ்

Currently online
என் காதல் கண்மணியே
காதலின் நாயகியே.....
என் சுவாசக் காற்றாய்
உன்னையே சுவாசித்தேன்.....
நீ என் காதலை மறந்து
என் கனவுகள் கலைத்து போனதேனோ...
கடைசிவரை கைப்பிடிப்பேன்
உன்னை என்றாயே...
என்னைக் கைவிட்டுச் சென்றதேனோ....

உன் நிறத்திலும் அழகிலும்
குறைந்தவன் என்றோ
என்னை மறந்து சென்றாய்....
இல்லை பல நாட்களாய் பழகிய என்னை விடவும் பாதியில் வந்தவன் பாசமானவன் என்றோ பாதியில் விட்டுச் சென்றாய்.......
நான் உனக்கு என்ன செய்தேனோ.....
பல கேள்விகள் என் மனதில்
அலைபாய்கின்றன......
ஏதும் அறியாதவனாய் திக்கித்திணறுகின்றேன்.....
பாசம் வைத்ததால்
அன்பன் நான் பாவியானேனோ.......

என் காதல் கோட்டை கனவுகளாகி
தூக்கம் கலைகையில்
கலைந்து போனதேனோ.....
காற்றலையில் அலைபேசியில்
பல முத்தங்கள் பதித்தாயே
இன்று என் மனதில் ஆழமாய்
ஆணியைப் போல் வலிகளை பதித்ததேனோ.....
பேதை நான் மனம் நொந்து வாடுகின்றேன் நீ என்னை இழந்து
விட்டாய் என்று.......

வெள்ளைத் தோலும் வெளிநாட்டு வாழ்க்கையும் உன் மனதை
கொள்ளை செய்தனவோ.......
ஆடம்பர வாழ்க்கை என் ஆழமான
அன்பை வென்றனவோ.......
அழகிலும் அந்தஸ்திலும் அவன் உயர்தவனாய் இருக்கலாம்....
என் அன்பிலும் சிறந்தவனா
என்பதை காலம் செல்லவே
புரிந்துக் கொள்வாய்.....
அன்று புரியும் என் அன்பின்
ஆழம் என்னவென்று......

அன்பே உன்னில் எனக்கு
கோபம் ஏதேனும் இல்லை........
உன்னை பழிவாங்கும் எண்ணம் கடுகளவும் இல்லை......
உன்னை நன்றாக வாழவைக்க
வேண்டும் என விரும்பினேன் நான்.....
நீ வாழ்க உன் காதலும் வாழ்க......
உன் வாழ்க்கை சிறக்க
என் இறைவனை வேண்டுகிறேன்......

நீ என்னை ஏமாற்றினாய் என தெரிந்தும் உன்னையே தேடுகிறது
என் மனம்.....
ஒரு போதைப் பிரியனும் கள்வனும் உன் கைப்பிடிப்பவனாய்
இருக்க கூடாது.....
அவன் என்னிலும் குணத்தில் சிறந்தவனாக அன்பிலும் உயர்ந்தவனாக இருக்க வேண்டும்.....
இருவரும் பல செல்வம் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும்.....
என என் இறைவனை வேண்டுகிறேன்......

அன்பே ஒன்றை மட்டும் நன்கு
புரிந்து கொள்வாயாக......
என்னிலும் அழகும் அந்தஸ்தும்
அறிவும் நிறைந்தவன் என்று
அவன் பின்னால் செல்கின்றாய்........
அவன் உன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அங்கிருந்து திரும்பிப்பார் உன் வரவுக்காய் காத்திருப்பேன்....
உன் காதலனாக அல்ல தோள்கொடுக்கும் தோழனாக.......

அனைத்தும் கற்பனையின்
வரிகள் மட்டுமே........

நன்றி
சதீஸ்


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.