Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, April 08, 2018

பாதாள உலகக் குழுதலைவர்களின் உதவியாளர்கள் கைது!

Currently online
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதுஷ் மற்றும் அங்கொட லொக்காவின் அடியாட்கள் என்று அழைக்கப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் மிரிஹானா சிறப்பு பொலிஸ் பிரிவின் உத்தியோகத்தர்களால் கொட்டிகாவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் ஹிங்குரான அங்கொடவில் வைத்து கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.மேலும் பல பாதாள உலக தலைவர்கள் வெளிநாடுகளில் இருப்பதாக தெரிய வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். பாதாள உலகின் தலைவரான அங்கோடா லொக்காவின் முக்கிய அடியாள் சரத் குமார கடந்த செவ்வாய்க்கிழமை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.