Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, April 11, 2018

நீ எனைக் கடந்தால்.......!! கவிப்புயல் சரண்

Currently online
மூக்கின் நுனி வேர்க்கும் 
முத்தங்கள் கேட்கும்
நித்தம் என் அருகில் 
நீ கடக்கும் போது........

விழிகள் திசை மாறும் 
வீரம் குனிந்து கொள்ளும்
வேகம் தனை மறந்து
வெட்கம் ஆட் கொள்ளும் ....

மூச்சு நின்று வரும் 
பேச்சு உளறி விடும் 
காய்ச்சல் நிறைந்து
உடல் வேர்த்து நனைந்து விடும்

நீ எனை விட்டுக் கடந்தால்.......

கொல்லும் விழிஇருத்திக் 
கோலக் கிளி பறந்தால் 
மெல்லச் சரிவாகும் 
மேடுயர் மலைகள் எல்லாம்...

கண்டம் கடந்து செல்லும் 
கணைகள் பறந்தது போல்
இன்றும் உருவாகும்
இதயத்தில் பெருங் கிடங்கே ......

         நன்றி 
கவிப்புயல் சரண்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.