Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, April 12, 2018

பேரூந்தில் கட்டணம் கூடுதலாக அறவிட்டால் இந்த இலக்கத்துக்கு அழையுங்கள்!

Currently online
இலங்கையில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பயணிகளின் நலன்கருதி இன்றும் 2500 பேரூந்து சேவைகள் நடத்தப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை போக்குவரத்துச் சபையும் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் இணைந்து நேற்று முன்தினமும் 2300 பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டிருந்தது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு மேலதிக பேரூந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இந்த பேரூந்து வண்டிகளில் பயணம் செய்யும் எந்தவொரு பயணியும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலான கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை என கூறியுள்ளார்.

எவரேனும் கூடுதலான கட்டணம் கேட்டால் தொலைபேசி ஊடாக முறையிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு 1955 என்ற இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர கூறியுள்ளார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.