Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, April 07, 2018

அரசு உயர்நிலைப்பள்ளிக்குள் மது போதையில் மயங்கி விழுந்த ஆசிரியர்!

Currently online
திருப்புவனம் அருகே அரசு பள்ளியில் பணியில் இருந்த ஆசிரியர் ஒருவர்  போதை மயக்கத்தில் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பூவந்தியில் அரசு உயர்நிலைப் பள்ளியில்  உடற்கல்வி (பிஇடி) ஆசிரியராக பணிபுரிந்து வரும் ரஜினிகாந்த்(40) எனப்படும் ஆசிரியரே போதை மயக்கத்தில் மையணியுள்ளார். 
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது நேற்று மதியம் பள்ளியில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் வைக்கும் அறையில் தனியாக அமர்ந்திருந்த வேளையில் திடீரென்று மயங்கி கதிரையில் இருந்து கீழே விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சக ஆசிரியர்கள், மாணவர்கள் ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது அவர் மது போதையில் கிடப்பது தெரியவந்துள்ளது. சக ஆசிரியர்கள் எழுப்ப முயன்றும் எழுந்திருக்க முடியாத மயக்கத்தில் புலம்பிக்கொண்டே இருந்துள்ளார். எனினும் குறித்த ஆசிரியர் அடிக்கடி பள்ளிக்கு மது போதையில் வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இது குறித்து முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. எனினும் அரசு பள்ளிக்குள் ஆசிரியர், மது போதையில் மயங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.