Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, April 12, 2018

பாகற்காய் தொக்கு செய்யலாமா ??

Currently online
தேவையான பொருட்கள் :
பாகற்காய் - ஒன்று (பெரியது)
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
பூண்டு - 6 பல்
குழம்பு மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
வெல்லம் - சிறிது (சுண்டைக்காய் அளவு)
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - 5
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - கால் கப்

செய்முறை: 
முதலில் பாகற்காயுடன் மஞ்சள் தூள் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மைக்ரோவேவ் ஓவனில் 8 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். (தனியாகவும் வேக வைக்கலாம்).

வேக வைத்த பாகற்காயை ஒன்றிரண்டாக மசித்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, பூண்டு, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். 

வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். 

தக்காளி குழைய வதங்கியதும் மசித்து வைத்துள்ள பாகற்காய், உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி வைக்கவும்.சுவையான பாகற்காய் தொக்கு தயார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.