Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, April 09, 2018

வலி. வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் உத்தியோகபூர்வ வரைபடம் கிடைக்கப்பெறவில்லை!

Currently online
பிறக்கப்போகும் சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு புத்தாண்டு பரிசாக யாழ்.மக்களுக்கு வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து ஒரு தொகை காணிகள் மக்களிடம் மீள வழங்கப்படும் என யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க வாக்குறுதி வழங்கியிருந்தார்.

இதற்கமைய 700 ஏக்கர் காணி மீள மக்களிடம் வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும், யாழ். மாவட்ட செயலகத்திற்கு இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்படும் குறித்த காணிகளின் வரைபடங்கள் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கட்டுவனிலிருந்து மயிலிட்டிச் சந்தி வரையிலான பிரதான வீதியில், சுமார் 4 கிலோ மீற்றர் நீளமான பகுதி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே உள்ள நிலையில் பாதுகாப்புத் தரப்பினரின் முன்னரங்க வேலிகள் இந்த வீதியில் அகற்றப்பட்டு வருகின்றன. 

இதற்கமைவாக குறித்த  வீதியும், அதன்  மேற்குப் புறமாகவுள்ள காணிகளும் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,

இருந்தபோதிலும், பாதுகாப்புத் தரப்பினரின் உத்தியோகபூர்வ வரைபடம் கிடைக்காமல் எதனையும் உறுதியாகத் தெரிவிக்க முடியாது எனமாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.