Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, April 08, 2018

க. பொ. த சாதாரணதரப் பரீட்சையில் ஆங்கில பாடம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் !

Currently online
2017ஆம் ஆண்டு கல்­விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண தரப் தேர்வில் 51.12 வீத மாணவர்கள் மாத்திரமே, ஆங்கில பாடத்தில் சித்தியடைந்துள்ளனர் என்று இலங்கை தேர்வுத் திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

ஏனைய பாடங்களுடன் ஒப்பிடுகையில், ஆங்கில பாடத்திலேயே மாணவர்கள் குறைந்தளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆங்கில பாடத் தேர்வில் 296,157 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 151,393 மாணவர்கள் மாத்திரமே தேர்ச்சியடைந்துள்ளனர்.

ஆங்கில பாடத்தில் 31,619 மாணவர்கள் அதி சிறப்புச் சித்தியையும், 19,822 மாணவர்கள் சிறப்புச் சித்தியையும், 39,717 மாணவர்கள் திறமைச் சித்தியையும், 60,235 மாணவர்கள் சாதாரண சித்தியையும் பெற்றுள்ளனர் என்றும் புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.