Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, April 11, 2018

யாழில் வாள்வெட்டு ; இரு இளைஞர்கள் படுகாயம்!

Currently online
யாழ். தெல்லிப்பழை மற்றும் கொடிகாமம் பகுதிகளில் நேற்று இரவு வாள்வெட்டுத் தாக்குதல்களில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தெல்லிப்பழைப் பகுதியில் மோட்டார்ச் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்கள் வீடுபுகுந்து சரமாரியாக வெட்டியதில் 19 வயதான இளைஞர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொடிகாமம் மந்துவில் பகுதியில் வீதியில் நின்றிருந்த இளைஞர்கள் மீது மோட்டார்ச் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்கள் துரத்தி துரத்தி நடாத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் 21 வயதான இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவங்கள் தொடர்பில் தெல்லிப்பழை மற்றும் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.