Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, April 08, 2018

ஜெயகுமாரின் வேண்டுகோளால் கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில்!

Currently online
தமிழக நலன் கருதி காவிரி உரிமையை பெறுவதற்காக ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி பார்க்க ரசிகர்கள் செல்லாமலிருந்தால் நல்லது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். இலங்கை கடற்படை முன்னர் எல்லை தாண்டி ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதில்லை என ரசிகர்கள் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் புறக்கணித்தால் எந்த போட்டியும் நடக்காது. தமிழகத்தில் உள்ள பிரச்னைகள் மக்களின் உணர்வுகள் கிரிக்கெட் வாரியத்திற்கு தெரியும். இந்த சூழ்நிலையில் போட்டி நடத்துவது உகந்ததல்ல எனக் கருதி போட்டியை நிறுத்த முடிவு செய்தால் வரவேற்கத்தக்கதாக இருக்கும்.

நடத்தியே தீருவோம் என்றால் தமிழக நலன் கருதி ரசிகர்கள் காவிரிக்காக கிரிக்கெட் போட்டிக்கு போகாமல் இருந்தால் நல்லது.தற்போது நான் அரசியல் கிரிக்கெட் தான் விளையாடுகிறேன். அரசியல் கிரிக்கெட்டில் 'பெஸ்ட் பேட்ஸ்மேன், பெஸ்ட் பவுலர், பெஸ்ட் ஆல்ரவுண்டராக' உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.