Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, April 09, 2018

யாழில் மர்மமான முறையில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பெண் கைது !!

Currently online
பல்வேறு கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவர் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் வைத்து நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் என பொலிஸார் கூறியுள்ளனர்.

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகையகம் ஒன்றிற்கு சென்ற குறித்த பெண், தங்க ஆபரணங்களைக் கொள்ளையிடும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் அந்த நேரம் கடை உரிமையாளர் வர்த்தக நிலையத்தின் அனைத்துக் கதவுகளையும் பூட்டிவிட்டு பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பெண் பொலிஸ் அதிகாரிகள் குறித்த பெண்ணை கைது செய்து யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.