Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, April 07, 2018

இருவரை வெட்டிய குற்றத்தின் பேரில் பூசாரிகளுக்கு விளக்கமறியல்!

Currently online
மட்டக்களப்பு- மாமாங்கம் குமரபுரம் பிரதேசத்தில் நடந்த வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக,  கைது செய்யப்பட்ட ஆலய பூசாரிகள் இருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டார். கடந்த சில மாதங்களாக குமாரபுரம், மாமாங்கம் ஆகிய இரு பிரதேசங்களைச் சேர்ந்த இரு குழுக்களிடையே மோதல்கள் இடம்பெற்று வருகின்றது. 

கடந்த புதன்கிழமை இரவு குமாரபுரத்தில் வீதியில் வைத்து அதே பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் மீது ஒரு குழுவினர் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பியோடினர். இதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து பொலிசார் வாள்வெட்டு நடத்தியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மாமாங்கப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு ஆலய பூசாரிகளை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். 

அத்துடன் அப்பகுதியில் உள்ள ஆலயத்தில் கருவறையில் வைக்கப்பட்ட வாளை குறித்த நபர்கள் எடுத்துச் சென்று இருவர் மீது தாக்குல் மேற்கொண்டு விட்டு திரும்ப அந்த வாள் இருந்த இடத்தில் வைத்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது. அந்த வாளை பொலிசார் மீட்டதுடன் இருவரையும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.