Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, April 11, 2018

என் உயிரோடு கலந்தவளே..................!!! சதீஸ்

Currently online
முழுமதி நிலவே
உன் முகம் காட்ட மாட்டாயோ!
எனக்கென பிறந்து
எனக்காக வந்தவளே.
என் அகம் முழுவதும் நீ தானே.

மல்லிகை மலர் சூடிய மயிலே!
உன் மனமும் நறுமணம் வீசுதடி.
உன் பார்வையிலே 
பாசமும் தெரியுதடி.
உன்னில் பைத்தியம் ஆனேனடி.

என் உயிரோடு கலந்தவளே.
என் உடல் விட்டு என் உயிர் 
பிரியும் வரை உன் உறவு வேண்டுமடி.
இறுதிவரை துணையாக 
வருவாயா என்னவளே.

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து.
என்னோடு இணைந்தவளே!
என்றும் உன்னை என் 
கண்மணி போல காப்பேனடி.
என் உயிராய் நேசிப்பேனடி.

அன்பே உன்னை உறவாய் பெற்றுக்கொண்டேன்.
என் உயிராய் காத்துக்கொள்வேன்.
என் உயிரோடு கலந்தவளும் நீ தானே.
என்றும் என்னவளும் நீ தானே.

என்றும் அன்புடன்.
 சதீஸ்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.