Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, April 09, 2018

பல் வலி குறைய செய்ய வேண்டியவை!!!!

Currently online
இன்றைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் சந்திக்கிற ஒர் அத்தியாவசியப் பிரச்சனையாக பல் வலி இருக்கிறது. 

கெமிக்கல்கள்,இனிப்பூட்டிகள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது, சரியாக பற்களை பராமரிக்காமல் இருப்பது ஆகியவை தான் காரணமாக இருக்கிறது. அதை அப்படியே கவனிக்காமல் விட அது அப்படியே பற்சிதைவுக்கு வலி வகுக்கிறது. பற்சிதைவின் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்கள் இந்த முயற்சிகளை எடுத்தால் அதன் தீவிரத்திலிருந்து நீங்கள் தப்பிக்கலாம்.

உங்களுடைய உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.எப்போதும் துரிதமான உணவுகளையும், குளிர்ச்சியான உணவுகளையும் அதிகம் உட்கொள்வதை தவிர்க்கவும். சர்க்கரை அதிகமிருக்கும் உணவுகளைச் சாப்பிடுவதால் பற்சொத்தை வரும் என்பதால் அதனைத் தவிர்க்கவும்.

அதே போல பைடிக் அமிலம் நிறைந்திருக்கும் உணவுப் பொருட்களை நீங்கள் சாப்பிடுவதால் அது பற்களுக்கு போதுமான அளவு கால்சியம் உறிஞ்சப்படுவதை தடுக்கும். சர்க்கரை அதிகமிருக்கும் பொருட்களில் பைடிக் அமிலமும் அதிகமிருக்கும். கால்சியம் பற்களைவலுவூட்ட அவசியமாகும். 

கால்சியம் நிறைந்த உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்.தினமும் பால், தயிர் உட்பட பால் சார்ந்த பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதிக குளிர்ச்சியான அதே நேரத்தில் அதிக இனிப்பான பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

உடலின் தண்ணீர் சத்து அவசியத்தை இதுவரை பல இடங்களில் படித்திருப்பீர்கள். உடலின் நீர்ச்சத்து பிற பாகங்கள் சீராக இயங்குவதற்கு மட்டுமே பயன்படுவதில்லை. வாயில் எச்சில் சுரக்கவும் பயன்படுகிறது. வாயில் எச்சில் சுரப்பது மிகவும் தேவை, அப்போது தான் பற்களில் வளருகிற பாக்டீரியாக்களை அப்போதே அது அழித்திடும்.




jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.