Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, April 09, 2018

படைவீரர்களுக்கு அரசாங்கம் அனைத்து வசதிகளையும் வழங்கும் ; ஜனாதிபதி!

Currently online
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தாய் நாட்டுக்காக தமது கடமைகளை நிறைவேற்றும் படைவீரர்களுக்கு அரசாங்கம் அனைத்து வசதிகளையும் வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், மாதுறு ஓயா இராணுவ பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்று வெளியேறும் நிகழ்வு  இடம்பெற்றது.  

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, மாதுருஓய இராணுவ பயிற்சிப் பாடசாலையின் கட்டளைத் தளபதி கேர்ணல் எம்.ரி.யு. மகலேக்கம் ஆகியோர் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரதானிகள் கலந்துகெண்டனர்

இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, 

பாதுகாப்புப்படை தமது சேவைகளை நிறைவேற்றும் போது ஆயுதங்களினால் மட்டுமன்றி அறிவு, இயலுமை, ஆக்கத்திறன் என்பவற்றினாலும் பலம்பெற்று அவர்களது திறமைகளை வெளிக்காட்ட வேண்டும் என்று தெரிவித்தார். இதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் வருகையை நினைவுகூறும் முகமாக மாதுறுஓயா இராணுவ பயிற்சிப் பாடசாலை வளாகத்தில் ஜனாதிபதி நாக மரக்கன்று ஒன்றை நாட்டியதுடன், அங்குள்ள மூலிகைப் பூங்காவையும் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.