Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, April 09, 2018

பெண்களே உதட்டிற்கு மேல் அசிங்கமாக முடி வளர்கிறதா? கவலையை விடுங்கள்!!!!

Currently online
பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் அழகு சம்பந்தப்பட்ட பிரச்சனை தான் உதட்டிற்கு மேலே மீசைப் போன்று முடி வளர்வது. பெண்களுக்கு உதட்டிற்கு மேலே முடி வளர்ந்தால், அது அப்பெண்ணின் தோற்றத்தை விசித்திரமாக காட்டுவதால், பலர் அப்பெண்ணையே கூர்ந்து கவனிப்பார்கள்.

இதுவே பல பெண்களுக்கு பெரும் சங்கடத்தை உண்டாக்கும். பெண்களுக்கு இம்மாதிரி உதட்டிற்கு மேலே முடி வளர்வதற்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் தான் காரணம். பல பெண்கள் உதட்டிற்கு மேலே வளரும். 
முடியை நீக்க பல அழகு சாதனப் பொருட்கள் உள்ளன. இருப்பினும் அனைத்து பொருட்களுமே உதட்டின் மேல் பகுதியில் உள்ள முடியைப் போக்காது. ஆனால் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு உதட்டின் மேல் வளரும் முடியைப் போக்கலாம். 

இக்கட்டுரையில் உதட்டிற்கு மேலே மீசைப் போன்று வளரும் முடியைப் போக்க உதவும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கடலை மாவு 
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு எடுத்து, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதில் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு அதை உதட்டிற்கு மேலே தடவி நன்கு காய வைக்க வேண்டும். கலவை நன்கு காய்ந்த பின், நீர் பயன்படுத்தி மென்மையாக மேல் நோக்கியவாறு ஸ்கரப் செய்ய வேண்டும். இறுதியில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், உதட்டிற்கு மேலே வளரும் முடியின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.

முட்டையின் வெள்ளைக்கரு 
முட்டையின் வெள்ளைக்கரு உதட்டிற்கு மேலே வளரும் முடியை நீக்கப் பயன்படுகிறது மற்றும் இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் அழுக்குகளை நீக்க உதவுகிறது. ஆகவே ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை உதட்டிற்கு மேல் பகுதியில் தடலி, 15-20 நிமிடம் நன்கு உலர வைக்க வேண்டும். பின் முடி வளரும் எதிர் திசையை நோக்கி உரித்து எடுத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். 

தேன் மற்றும் சர்க்கரை 
தேன் மற்றும் சர்க்கரை வேக்ஸிங் பொருட்கள் போன்று செயல்படும். இது சருமம் வறட்சி அடையாமல் தடுத்து, சருமத்திற்கு நீர்ச்சத்தை வழங்கும். அதற்கு 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு எடுத்து கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து சூடேற்ற வேண்டும். பின் அதை இறக்கி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். எலுமிச்சை சாறு ப்ளீச்சிங் ஏஜென்ட் போன்று செயல்படும். பின் தயாரித்து வைத்துள்ள கலவையை உதட்டிற்கு மேலே தடவி, அதன் மேலே வேக்ஸிங் ஸ்ட்ரிப் அல்லது காட்டன் துணியை வைத்து, பின் உரித்து எடுக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இறுதியில் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.