Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, April 08, 2018

ஏதோ ஓர் குழப்பம்.........!!! சதீஸ் குமார்

Currently online
என் மனதில் ஏதோ ஓர் குழப்பம்....
என்னவென்று தெரியவில்லை.....
உற்சாகம் இழந்து உடல் 
முழுவதும் சோர்வு.....!!!

என் சிந்தனைகள் அங்கும் இங்கும் அலைபாய்கிறது......!!!!


தனிமையில் ஏதேதோ 
யோசனை வருகிறது....
கொஞ்சம் கண்ணீரும் வருகிறது....
காரணம் எதுவாக இருக்கும்.....!!!

எனக்கு என்ன கவலை
 நான் நன்றாக தானே இருக்கிறேன்......
ஆனால் ஏதோ ஒரு கவலை 
என்னை ஆட்கொள்கிறது.....!!!

நான் அனைத்தையும் இழந்ததாய் 
ஒரு உணர்வு...... 
ஆம் நான் அனைத்தையும் 
இழந்து விட்டேன்.....!!!

இப்போது தனிமையில்
 நீண்ட தூரம் நடந்து கொண்டே இருக்கிறேன்....
முடிவெதையும் காணவில்லை....
என் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது....!!!

நான் சோகக்கடலில் மிதப்பது 
போலும் ஒரு நினைவு.... 
என்னை யாரோ அழைப்பதாய் 
ஒரு உணர்வு.....
அங்கும் இங்கும் தேடுகிறேன்
 யாரையுமே காணவில்லை.....
என் தேடல்கள் மட்டுமே மிஞ்சியது.....!!!

இதன் காரணம் காதலின் 
வலியாக இருக்கும் என்று கடுகளவும் சிந்திக்க வேண்டாம்....
நான் காதலைப்பற்றி எள்ளளவும் எண்ணவில்லை.....
என் மனதில் வலிகள் 
ஏராளம் உள்ளன.........!!!

என் உறவுகள் என் முன்பே 
சொர்க்கலோகம் சென்றது கூட
 என் குழப்பத்திற்கு காரணமாகலாம்.....
நான் ஏழையாக பிறந்து கூட ஒரு காரணமாகலாம்...!!!

இல்லாவிட்டால் இந்த அநியாயம் நிறைந்த
 பூமியில் எப்படி வாழப்போகிறேன் 
என்பதும் என் குழப்பமாக இருக்கலாம்....
வறுமையிலும் மறுமலர்ச்சி காணவேண்டும் என்ற 
என் எண்ணங்களாகவும் இருக்கலாம்....
காரணம் தேடிக்கொண்டே இருக்கிறேன்......!!!



குழப்பத்துக்கு காரணம் தேடியே 
குழம்பிப்போனேன்.....
இறுதியில் அனைத்துக்கும் 
காரணம் அறிந்தேன்....!!!

நான் இறந்து பல மணிநேரம் ஆகிவிட்டது....
என் ஆத்மாவே அங்கும் இங்கு அலைகிறது....
அனைத்தையும் இழந்து விட்டேன்...
இனி எனக்கு இந்த பூமியில்
 எதுவுமில்லை இடமுமில்லை....!!!

என் சொந்தங்களோடு சேர 
சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது.....
நான் அங்கு செல்லப்போகிறேன்......
இந்த தொல்லை நிறைந்த உலகம் எனக்கு வேண்டாம்....
உங்களிடம் இருந்து விடைபெற்றுக் கொள்கிறேன்......
நன்றி உறவுகளே.....!!!!!!!


நன்றி
சதீஸ் குமார்  
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.