Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, April 07, 2018

கொடு.................!!!செல் வா கவி

Currently online
உன் நினைவுத் தீச்சுடர்
விரட்டி விரட்டி தொடர்ந்தும்
சுட்டுட்கொண்டிருக்கிறது
என் அத்தனைகளையும்..!!!

நான் உன்னை விரும்பியதும்
ஏன் எனை விரும்பாமல்
போனது இன்பங்கள்..!!!

நீ என்னை வெறுத்ததும்
ஏன் எனைப் பார்த்து சிரித்தது
துன்பங்கள்..!!!

நீதான் வானமென்றிருந்தேன்
உனக்குள்தானே மேகம்
எனக்கு மழை கொடு..!!!

நீதான் பூச்செடியென்றிருந்தேன்
உனக்குள்தானே மலர்
எனக்கு மணத்தைக் கொடு..!!!

நீதான் கடலென்றிருந்தேன்
உனக்குள்தானே சிப்பி
எனக்கு முத்து கொடு..!!!

நீதான் தாயென்றிருந்தேன்
உனக்குள்தானே அன்பு
எனக்கு மடி கொடு..!!!

நீதான் தென்றலென்றிருந்தேன்
உனக்குள்தானே சுவாசம்
எனக்கு உயிர் கொடு..!!!

நீதான் நானென்றிருந்தேன்
உனக்குள்தானே நான்
எனக்கு என்னைக் கொடு..!!!



நன்றி 
(செல் வா)
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.