Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, April 12, 2018

ஈழத்தின் ஆழம் அளப்போம் தோழர்களே.......!!! யசுதன்

Currently online
ஈழ மண்ணின் சாபம்தான் என்ன?
மங்கையர் நெற்றிக்குங்குமம் இழப்பதா?
இரத்தச்சிவப்பை சிந்திவிட்டு
வெள்ளை ஆடை விதவைக்கோலமா?
ஊனமுற்ற ஈழமென
உலகம் ஓங்கி உரைப்பதா?

போருக்காய் பிறப்பெடுத்த பூமியா எம்பூமி
போய்விட்ட காலத்தில் பேய்களின் ஆட்சி
போதாதா நாம் கண்ட ஈழத்தின் 
வீழ்ச்சி
மழைகூட மண்வர மறுக்கிறது காரணம்
மண்ணில் மனித இரத்தம்
காற்றில் கதறல் ஒலி காதைக் கிழிக்கிறது..

மானிடா மதியை மயக்கி விட்டு
சதிக்காட்டில் தொலைந்ததேனோ?
அறிவுக்கத்தி தேய்ந்து விட்டதா
தோய்ந்து கொள்..காகித விலங்கால் காலத்தைக் கட்டிவை..

ஈழத்தில் புதைந்தவை பிணங்கள் மட்டுமல்ல..
இறந்தவனின் மறைந்துபோன ஆசைகளும்தான்..

நன்றி 
யசுதன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.