Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, April 11, 2018

ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடிவு!

Currently online
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையில் சென்னையில் ஐ.பி.எல். போட்டியை நடத்தவிட மாட்டோம் என அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி சேப்பாக்கம் பகுதியில் போட்டியை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தால் சேப்பாக்கம் பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது.  பலத்த பாதுகாப்புகளுக்கிடையில்  போட்டி நடைபெற்றது

இன்று பேட்டி அளித்த  தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையினர் ஐபிஎல் போட்டிகள் எப்போது நடந்தாலும் எதிர்ப்பு தெரிவிப்போம் என கூறியுள்ளார்.

சென்னை ஐபிஎல் போட்டிகளை கேரள மாநிலத்தில் நடத்த தயாராக இருப்பதாக அம்மாநில  கிரிக்கெட் சங்கம் கூறி இருந்தது.

இந்த நிலையில் ஐபிஎல் தலைவர் டெல்லியில் பேட்டி அளிக்கும் போது சென்னை ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

விசாகபட்டினம் அல்லது கர்நாடக மாநிலத்திற்கு  ஐபிஎல் போட்டிகள் மாற்றப்படும் என தெரிகிறது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.