Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, April 12, 2018

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள் !!

Currently online
பயணிகளின் நலன் கருதி பண்டிகைக் காலத்தில் 2,500 பேருந்து சேவைகள் நடத்தப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. 

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை போக்குவரத்துச் சபையும், பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் இணைந்து 3,300 பேருந்து சேவைகளை கடந்த சில நாட்களாக நடத்தியிருந்தன. 

ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர, நேற்றும் 2,500 பேருந்து சேவைகள் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

நாட்டின் முக்கியமான நகரங்களில் இருந்து ஏனைய பாகங்களுக்கு பேருந்து சேவைகள் நடத்தப்படுகின்றன. 

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு மேலதிக பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 

இந்த பேருந்துகளில் பயணம் செய்யும் எந்தவொரு பயணியும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலான கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை எனவும் எவரேனும் கூடுதலான கட்டணம் கேட்டால் 1955 என்ற இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி முறையிடலாம் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.