Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, April 09, 2018

யாழில் பெருமளவு பொலிஸார் பாதுகாப்புப் பணியில்!

Currently online
தமிழ்–சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு,  வடக்கு மாகாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருவதாக வடக்கு மாகாண மூத்த பொலிஸ்மா அதிபர் றொசான் பெர்னாண்டோ, தெரிவித்துள்ளார்.

 நாளை முதல் தமிழ் – சிங்களப் புத்தாண்டு வியாபாரங்கள் நகர்களில் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும். 

இதனைப் பயன்படுத்தி திருட்டு முயற்சிகளிலும் ஈடுபடக் கூடும். இந்த நிலையிலேயே, பாதுகாப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

நகரை அண்டிய இடங்களில் சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு வலயம் ஏற்படுத்தப்படும். மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில், களியாட்டங்கள் நடைபெறும் இடங்கள் இவற்றுக்கு அருகிலும் பெருமளவு பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 

பிரச்சினைகளைத் தடுப்பதற்கு சிறப்பு பொலிஸ் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண மூத்த பொலிஸ்மா அதிபர் றொசான் குறிப்பிட்டார்.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.