Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, April 07, 2018

KFC_ல்_இன்று......!

Currently online
முட்டிக்கொண்டு வந்தால்
முதல்ல போறது அங்கதான்
காரணம்
பைசா செலவில்லை
பளிச்செண்டும் இருக்கும்

இண்டைக்கும் அப்பிடித்தான்
வேளைக்கே போனதால
கிளீனிங் நடந்திச்சு.
சமாளிச்சு உள்ள போய்
சமாச்சாரம் முடிச்சிட்டு
நிம்மதிப்பெரு மூச்சோட
நிமிந்து பாத்தன்

உச்சந்தலையில
ஓங்கியடிச்ச மாரி
மண்டை கலங்கி
மதி கெட்டு நிண்டன்

என்ர வயசிருக்கும் - இல்லை
என்னை விட குறைவுதான்
வடிவான பொடியன்
வாட்ட சாட்டமும் கூட

மூத்திர கோப்பையை
முழுசா கழுவிறான்

இதில என்ன இருக்கு
கையுக்கு கவறைப் போட்டு
மூக்குல மாஸ்க்கை போட்டால்
முடிஞ்சுது அலுவல்

இங்க கதையே வேற
வெறுங் கைதான்
வாளிக்க நுரையிருக்கு
கையில பஞ்சிருக்கு
ஒவ்வொரு கோப்பையா
உரஞ்சி கழுவுறான்.

அரியண்டம் பிடிச்சவனே
அருவருப்பு இல்லையாடா??
கண்டவன் நிண்டவன் எல்லாம்
ஒண்டுக்கு அடிச்சதை
கையால கழுவுறாய்

ஹா ஹா
ஒண்டுமில்லையண்ணே
என்ர பிழைதான்
கை கவரை காணேல்ல
கழட்டி வச்சனான்
காணாமல் போச்சுது..
கையில காசில்லை
காசு வர வாங்கிடுவன்

எட்டு மணிக்கு முதல்
எல்லாம் கழுவணும்ணே
வெளிநாட்டு சீசன் வேற
வேளைக்கே வந்திடுவாங்க
வேலையிருக்கண்ணே
கதைக்க நேரமில்லை

யாரிவன் ?
ஏன் இந்த வேலை ?
படிச்சவனா ?
பாமரனா ?
வீட்டு கஸ்ரமோ ?
வேறயேதும் பிரச்சினையோ ?
ஏராளம் கேள்வி
எதுக்குமே விடையில்லை

கருணைப்பட்டு
காசு குடுத்திருப்பன் - அவன்
கையேந்த கூடாது
கடனாத்தான் குடுத்திருக்கன்
கட்டாயம் வாங்குவன்.

அவன்
சொந்தமா உழைக்குறான்
#சோந்திடக்கூடாது...!

ஸ்ரீ கோகுல்
Sri Kogul
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.