Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, April 09, 2018

என்னவளை பார்.......!! ஆகிஷா.S

Currently online
என்னவளை பார்
எரிமலைகள் கொஞ்சம்
பனிக்கட்டி யாகும்
மரிக்கின்ற மனிதம்
மீண்டும் துளிர்க்கும்
எகிப்தின் மம்மிகளும்
உயிர் பிழைக்கும்
ஏவாள் காலம்
திரும்ப வரும்..

என்னவளை பார்

உன் முகத்தில் புதிதாய்
புன்னகை தோன்றும்
உனக்கும் கூட
காதல் வரும்
கவிதை கிறுக்கும்
கிறுக்கனாவாய் - நீ
ஞானம் அடையா
ஞானியாவாய்..

சுற்றும் உலகம் உன்னை
சுற்றும் - தினம்
கனவுகள் தோன்றி
இம்சை பண்ணும்
இராத்திரிகளின்
தனிமை புரியும்
இளமை கூட எட்டியே
பார்க்கும்..

என்னவளை பார்

பூக்களின் ஸ்பரிச 
இன்பம் தெரியும்
கண்களில் இரண்டு
விண்மீன் ஓடும்.

கண்ணாடியில் உன்
விம்பம் புதிதாய் புலரும்
காகம் கூட உனக்காய்
கரையும்
ஷாஜகான் ரசனை
தோற்றே போகும்
காத்திருப்புகள் யாவும்
சுகமாய் ஆகும்..

என்னவளை பார்

உன்னை உனைக்கே
பிடித்து போகும்
திட்டல் ஒலிகள்
தேனாய் பாயும்..
திகட்டா மோகம் நெஞ்சை
தாக்கும்
திமிரும் மனமும்
பிச்சை கேட்கும்..

என்னவளை பார்

உனக்கு தேவதையோ
தெய்வமோ இரண்டில் ஒன்று
நிச்சயம் தெரியும்..

நன்றி 
ஆகிஷா.S

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.