Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, May 02, 2018

வாழ்வின் தேடலில் அவனது பயணம் ; கரவையூர் அதிரதன் (பாகம்-10)

Currently online
அவளுக்கு தன்னை நினைக்க தனக்கே அருவருப்பாக இருந்தது. என்னாலே என்ர குடும்பத்துக்கு தேவையல்லாத பிரச்சினை எல்லாம். பாவம் அப்பா இப்ப காசுக்கு எங்க போவார் என்டு எண்ணிய படி தன் அறையை நோக்கி நடந்தாள். 

கதவு வாயிலில் அவளது நிழலைக் கண்ட மாணிக்கம் திகைத்துப் போனார்.......

வாசலைப் பார்த்தியா? அவள் பிள்ளை நின்டு கேட்டிருக்கிறாள் போல....... சீ அவள் தண்ணி குடிக்க வந்திருப்பாள் போய் பேசாம படுங்க. எல்லாம் காலமை பேசலாம். 

அடுத்த நாள் விடிந்தது. வழமைப் போல எல்லாம் நல்ல படியா தான் போய் கொண்டிருந்தது. தாய் கடைக்குப் பாறன் என்டு சொல்ல இல்லையணை நான் போட்டு வாரன் எண்டு சொல்லி காசையும் வாங்கிக் கொண்டு போனவள் அப்பவும் நீ அவளை விட்டு இருக்க மாட்டம குறை அவள் சமாதானப்படுத்தி என்கிட்ட உன்னை தந்திட்டு பத்து நிமிஷத்துல வந்திடுவன்னு போனவள். ஆண்டவன் என்ன நினைச்சானோ தெரியாது. சாமான் வாங்கிக் கொண்டு திரும்பி வரேக்க ஒரு லாறிக்காரன் வந்து அடிச்சிப் போட்டுட்டு ஓடிட்டான். அங்க நின்ட ஆக்கள் தூக்கிக் கொண்டு ஆசுபத்திரிக்கு கொண்டு போற வழியில அவட சீவன் போட்டுது. 

ஆசுபத்திரிக்கு கொண்டு போனா விளக்கம் வைச்சிப் பொடியை இழுத்தடிப்பாங்கள் எண்டு செல்லையாண்ணை ஆக்கள் வீட்ட கொண்டு வந்து வைச்சிட்டு போட்டுதுகள். கத்தினம் குளறினம் என்னவெல்லாமோ செய்தம் பேனவள் எப்படி திரும்புவாள். மூணு பேர்ட கண்ணாலயும் கண்ணீர் வடியுது. 

சரி விடு அப்பு அது அவள்ட விதி எல்லாரும் ஒரு நாள் போறது தானே அப்பு. தாத்தாவின் மடியில் தலை வைத்துப் படுத்த படி அழுது கொண்டேயிருந்தான். அன்பாக அப்படியே அவனது தலையை வருடி விட்டுக் கொண்டிருந்தார் மாணிக்கம். அனித்தன் அசந்து தூங்கி விட்டான். அவனைத் தூக்கிக் கொண்டே கிடத்தி விடுங்கோவன் அறைக்குள்ளே அனித்தனைத் தூக்கிக் கொண்டே கிடத்தி விட்டு வந்தார் மாணிக்கம்.

எப்பிடி காலம் போகுதெண்டே தெரியல. என்ன வேகமா போகுது அவள் செத்து இவன் ஒம்பதாம் வகுப்பும் வந்துட்டான். வார மாசத்தோட பத்தாம் வகுப்பு. பதினைஞ்சு வருஷமாகுது. ஒரு நாள் தன்னும் இவன்ர அப்பன் வந்து இவனைப் பார்த்திருப்பானே என்ன மனுஷ ஜென்மமோ அம்மா இருங்கோ ஏன் இப்படியெல்லாம் கதைக்கிறியள் மேல ஒருத்தன் இருக்கான் எல்லோ அவன் பார்த்துப்பான் விடுங்கோ. அப்படியே கதைத்துக் கொண்டு படுக்கப் போனார்கள்.

மறுநாள் விடிந்தது. வழமைப் போலவே அன்றைய பொழுது போனது. இப்படியே நாட்கள் நகர்ந்து கெண்டிருந்தது. அனித்தனின் இறுதி தவணைப் பரீட்சை ஆரம்பம். இரவிரவாய் படிப்பான் சோதினை எழுதிப் போட்டு வர எப்பிடி மோனை சோதினை எண்டா மாணிக்கம் உனக்குத் தெரியும் தானே எனக்கும் உந்த சோதினைக்கும் வெகு தூரம். போனமுறை பதின்மூணாம் பிள்ளை இந்த முறை ஒரு பிள்ளைக் கூடப் பாக்கிறன் பாப்பம்.......

தொடரும் .................!!
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.