Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, May 07, 2018

வாழ்வின் தேடலில் அவனது பயணம் ; கரவையூர் அதிரதன் (பாகம்-11)

Currently online
சரி மோனே ஏதோ ஒழுங்கா படி. ஒழுங்கா படிச்சு கொம்மான்ர கனவ நிறைவேத்து பிறகு மற்றவன் சொல்லகூடா தாய் தேப்பன் இருந்திருந்தா ஒழுங்கா வளத்திருக்குங்கள். இது கிழடுகள் பிள்ளைய பழுதாக்கி போட்டுதுகள் எண்டு. விளங்குதே மோனே..

ம்ம் சரி மாணிக்கம் நீ கவலப்படாத. எல்லாம் நான் பாத்துக்குறன். யாமிருக்க பயமேன் எண்டபடியே போனான் அனித்தன். 

தவணைப்புள்ளி வந்தது. அதே பதின்மூணாம் இடம்தான். கவலையோட வந்தான் வீட்ட. என்னப்பு சோகமா வாறாய்.. 

போ ஆச்சி எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சன் ஒரு பிள்ள முன்னுக்கு வரணும் எண்டு, முடியல.. அதே பதின்மூணாம் பிள்ளதான். சரி விடு அப்பு அடுத்த சோதினல பாத்துக்கலாம்.. 

ம்ம் ஆனா எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சன். ஆச்சி எனக்கு சைக்கிள் தந்தது பள்ளிக்கூடத்தில பாக்கிறியா.. ஏன் அப்பு உனக்கு சைக்கிள் தந்தது..? அண்டைக்கு சொன்னான் தானே ஆச்சி அப்பா அம்மா இல்லாதவங்களுக்கு குடுத்தது நானும் பேர் குடுத்தன். என்னடா சொல்றாய். யார் உன்னை அப்பிடி சொல்ல சொன்னது..? 

ஏன் நான் உண்மைய தானே சொன்னான். என்னடா உண்மை. உனக்கு அண்டைக்கு முழுக்கதையும் சொன்னது தானே. பிறகு என்ன? ஆச்சி நீசும்மா அவருக்காவண்டி வக்காளத்து வாங்காத வேணாம் எண்டு தானே விட்டுட்டு போனவ அவர் பேர முன்னுக்கு போடவே ஒரு மாதிரி கிடக்கு எனக்கு. பொம்பிள பிள்ளையா பிறந்திருந்தா கலியாணத்துக்கு பிறகு மாத்திடலாம். இது ஆம்பிள பிள்ளையா பிறந்து தொலச்சிட்டன். சாகும் வரை அததான் போட்டு தொலைக்கணும். இனியும் அந்தாளப்பற்றி கதைக்காத. நானும் உன் பிள்ள போன இடத்துக்கே போய் சேர்ந்திடுவன். 

டேய் அனித்தன் என்னடா கதைக்கிற... சரி இனி நான் ஒண்டும் கதைக்கேல. போய் படித்திட்டு எழும்பி படி நாளைக்கு ரியூசன்ல சோதினை எல்லோ.. பிறகு ரியூசனுல அடிவாங்காம ஒழுங்கா மாக்ஸ் எடுக்குற வழிய பார்டா. ம்ம் என்றவாறே தனது அறைக்குள் நுழைந்தான் அனித்தன்..

அனன்யா என்னம்மா- என்ன மாக்ஸ் எல்லாம் கூட போல.. இண்டைக்கு சந்தோஷமா இருக்க. ஓம் அப்பா பள்ளிக்கூடத்தில நாலாம் பிள்ளை. அடடா போன முறைய விட இரண்டு பிள்ளை கூடி இருக்கீங்க போல. ஓமப்பா ஆனா... ஆனால் சொல்லுமா, ரியூசன்ல இன்னைக்கு தான் எக்ஸாம். அதான் பயமா கிடக்கு. பயப்பிடாமல் போய் எழுதுமா. பள்ளிக்கூடத்திலயே நாலாம்பிள்ள. இனி ஏன் பயப்பிடுறாய்.? இல்லையப்பா அங்க எல்லா பள்ளிக்கூட பொடியளும் வருவாங்கள் எல்லோ. சரி விடு. சந்தோஷமா போய் எழுது. பயப்பிடாத. ம் சரி அப்பா நேரமாயிட்டு நான் போட்டுவாறன்.ம்ம் போயிட்டு வாமா.

என்னவாம் மேளுக்கு சந்தோஷம் போல நாலாம்பிள்ள எண்டு.ம் ஆனா முகம் சரியில்ல ரியூசன்ல எக்ஸாமாம் முதல் தடவையா ரியூசன்ல எக்ஸாம் எழுதுறாள் எல்லே அதான்.. சரியாகிடும் நாள் போக, அத விடு சாப்பாட்ட எடு பசிக்குது.ம் சரி வாங்கோ..

ஆச்சி நா எக்ஸாமுக்கு போட்டு வாறன். ம்ம் சரி மோனே வடிவா எழுது.ம் சரி.

டேய் வாடா போலாம். ம் கணநேரமா நிக்கிறி

தொடரும் ................!!
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.