Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, May 04, 2018

வாகன விபத்தில் சிக்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு !!

Currently online
வாகன விபத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

குறித்த விபத்து கண்டி - மஹியங்கன வீதியில் தெல்தெனிய வேகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பாரவூர்தி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபரும் பின்னால் அமர்ந்து சென்ற சிறுவனும் பலத்த காயமடைந்து தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் மஹியங்கன மாபாகடவெவ பகுதியை சேர்ந்தவன் என அடையாளம் காணப்பட்டுள்ளான். 

பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் தெல்தெனிய பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.