Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, May 07, 2018

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு ; 13 பேர் பலி, 31 பேர் படுகாயம் !!

Currently online
எதிர்வரும் அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஒரு மசூதியின் மைதானத்தில் கூடாரம் அமைத்து, அது வாக்காளர் பதிவு மையமாக செயல்பட்டு வந்தது. நேற்று ஏராளமானோர் தங்கள் பெயர்களை பதிவு செய்ய சென்று இருந்தனர். 

அப்போது அங்கு பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் மக்கள் இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது. அவர்கள் அலறியவாறு நாலாபுறமும் ஓடினர். இருப்பினும் இந்த குண்டுவெடிப்பில் 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 31 பேர் படுகாயம் அடைந்தனர். 

படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த குண்டுவெடிப்புக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சம்பவ இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து விசாரணை மேற்கொண்டனர். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.