Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, May 07, 2018

கொள்ளையர்களின் தாக்குதலில் சிக்கி நைஜீரியாவில் 45 பேர் உயிரிழப்பு !!

Currently online
நைஜீரியாவில் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 45 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கடுனா மகாணத்தில் கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க அங்குள்ள மக்களே ஒரு பாதுகாப்பு குழுவையும் அமைத்துள்ளனர்.  

இந் நிலையில், அங்குள்ள காஸ்கா என்ற கிராமத்தில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதோடு பல வீடுகளுக்கு தீவைத்துள்ளனர். இந்த தாக்குதலில் 45 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குறித்த தாக்குதலில் இருந்து உயிர் தப்பியவர்கள், அப்பகுதியில் உடனடியாக ராணுவம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த கொள்ளை சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடைபெற்றுள்ள கிராமத்தின் அருகே மற்றொரு கிராமத்தில் கடந்த வாரம்தான் தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.