Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, May 08, 2018

ஆப்கானிஸ்தானில் பொலிசார் 5 பேர் சுட்டுக்கொலை !!

Currently online
ஆப்கானிஸ்தானில் பொலிசாருக்கும் தலீபான்களுக்கும் இடையேயான கடும் துப்பாக்கி சண்டையில் 5 பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய தலீபான் பயங்கரவாதிகள், பொலிசார், இராணுவ வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கந்தகார் மாகாணத்தில் பாகிஸ்தான் நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள மரோப் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பொலிசார் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் போலிசாரின் வாகனங்களை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட பொலிசார் உடனடியாக பதில் தாக்குதலை தொடுத்தனர்.

இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் சுட்டதில் பொலிஸ் அதிகாரிகள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 9 பொலிசார் படுகாயம் அடைந்தனர்.

அதே சமயம் பயங்கரவாதிகள் தரப்பில் 15 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.