Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, May 02, 2018

நைஜீரியாவில் தற்கொலை படை தாக்குதல் : 71 பேர் உடல் சிதறி உயிரிழப்பு!!!!!

Currently online
நைஜீரியாவில் மசூதி அருகே அடுத்தடுத்து 2 இடங்களில் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 71 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள முபி நகரில் மசூதி அருகே மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த தற்கொலை படை தீவிரவாதி உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தான். 

மேலும் சற்று நேரம் கழித்து அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள அங்காடி ஒன்றிலும் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த 2 தாக்குதலில் 71 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று நைஜீரியா மருத்துவ அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் போகோஹராம் பயங்கரவாதிகளே தாக்குதலுக்கு காரணம் என்று தெரிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.