Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, May 03, 2018

விபத்துக்குள்ளாகிய விமானம் ; அமெரிக்க இராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழப்பு !!

Currently online
அமெரிக்காவில் இராணுவத்துக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் 9 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்றையதினம் அமெரிக்க இராணுவ வீரர்கள் ஜார்ஜியா நகரில் விமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 9 இராணுவ வீரர்கள் கொண்ட குழு ஹெர்குலஸ் என்ற சி-130 ரக விமானத்தில் காலை 11:30 மணியளவில் சாவன்னா விமான நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவ்விமானம் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 9 இராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர் உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.