Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, May 08, 2018

தனிமையின் நினைவுகள்...........!! கவிதையின் பிரியை சுஜனி

Currently online
தூரத்தில் நீ இருக்கிறாய்
தொலைந்துபோகிறேன் உன்
நினைவுகளை தாங்கிய சுமை
தாங்கியாக சின்னத்திரை நாடக
காதலாய் வண்ணத்திரைகொண்டு மேலோங்கி வந்தவனே

என் எண்ணத்திரை கிழித்து
எங்கு சென்றாயோ 
துக்கித்து தவிக்கும் என் இதயம் தூக்கம்மின்றி தீண்டி பார்க்கும் என் விழிகள் தினம் பொங்கல் கோலம்மிட்டு பூத்திருப்பதை 
அறிவாயோ நீ!

தாலிச்சுமையற்று தாயாகி நான்
இருக்க வேலை கதை கூறி வெளியூர் சென்றாயோ உன் பிள்ளை தந்தை 
எங்கு என்று கேட்கையிலே உன் நினைவுகளையே வீசுகிறேன்

சுடும் பனிர் குளிரினில் துளிர்
விடும் வெயில் முத்தங்கள் 
நீவிடும் மூச்சினில் அசைந்தாடும் மரக்கிழைகள் உனைத்தாலாட்டி அழைப்பதை புரிந்திடடா என்னவனே

உன் நினைவு என் கனவில் தினம்
தினம் வருகிறதே தீயாக என்
உடலும் நொடிக்கு நொடி 
எரிகிறதே பாசமழை பொழிந்தவனே

ஆசைகள் விதைத்து அன்பினால்
எனை எய்தெடுத்தாய் காலம் 
வரை உன்னவளாய் காத்திருக்கும்
கண்மணியின் காதல் கடிதம் இது 
கவிதையின் வடிவோடு

                  நன்றி 
கவிதையின் பிரியை சுஜனி
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.