Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, May 07, 2018

மே தினம் இலங்கையில் இன்று அனுஷ்டிப்பு !!

Currently online
இலங்கையில் இன்று மேதினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மேதின கூட்டங்களை இன்று நடத்தவுள்ளன.
   
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் மட்டக்களப்பு, செங்கலடி, மாவடி வேம்பில் இன்று நடைபெறவுள்ளது. 

கொழும்பு பீ.ஆர்.சி விளையாட்டு மைதானத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் மேதின கூட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

காலி சமனல விளையாட்டு மைதானத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

ஜாதிக ஹெல உறுமயின் மேதின கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் தலைமையில் இன்று காலை கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கொழும்பு பொது நூலகத்திற்கு அருகில் ஆரம்பமாகும் ஊர்வலம் புதிய நகர மண்டபத்தை சென்றடையும்.

மேலும் அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் மற்றும் ஏனைய தொழிற்சங்கங்கள் நடத்தும் மே தினக் கூட்டங்கள், இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.