Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, May 07, 2018

விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகை கஞ்சா ஓமந்தையில் உள்ள வீடொன்றில் மீட்பு!

Currently online
வவுனியா - ஓமந்தை பகுதியில் பெருமளவு கேரள கஞ்சாவினை மீட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஓமந்தை பன்றிக்கெய்த குளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் விற்பனைக்காக பெருமளவு கஞ்சா மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்ததையடுத்து நேற்று  அதிகாலை மேற்கொள்ளப்பட்ட  திடீர் தேடுதல் நடவடிக்கையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 69 கிலோ 725 கிராம் கேரளா கஞ்சாவினையும் சந்தேகநபர்கள் மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள்  மல்லாவியை சேர்த்த க.சபேசன் (23வயது), திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த சி. துசாந்தன் (வயது 23), யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியைச் சேர்ந்த ஆர். ரஜீபன் (28 வயது) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது 

மேலும் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவினையும் சந்தேக நபர்களையும் பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக  பொலிசார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.