Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, May 05, 2018

காங்கிரஸ் கட்சியினர் ஏழைகளின் வாழ்க்கையை மாற்ற எதுவும் செய்யவில்லை;மோடி ஆவேசம்!

Currently online
கர்நாடகா மாநிலம் தும்கூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றும் போதே காங்கிரஸ் கட்சியினர் ஏழைகளின் வாழ்க்கையை மாற்ற எதுவும் செய்யவில்லை என ஆவேசமாக கூறியுள்ளார். 

சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக ஜேடியு செயல்படுகிறது. மத்தியில் 70 ஆண்டுகள் ஒரே குடும்ப ஆட்சி ஆனால் விவசாயிகள் வாழ்வு மாறவில்லை. உருளை கிழங்கில் தங்கம் விளைவித்தவர்கள் விவசாயிகள் பற்றி பேசுகிறார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஏழைகளின் வாழ்க்கையை மாற்ற காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என்றும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பிரதமரான பிறகு இப்போது ஏழைகளை பற்றி காங்கிரசார் பேசுவது கூட இல்லை எனவும் மோடி கூறினார். 

மேலும் இந்திரா காந்தி காலத்திலிருந்தே ஏழைகளை ஏமாற்றியே காங்கிரஸ் வெற்றி பெற்று வந்திருப்பதாகவும் மோடி  ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது காங்கிரஸ் விவசாயிகளுக்கு என்ன செய்தது எனவும் பிரதமர் கேள்வி எழுப்பினார். விவசாயிகள் கடனாளிகளாக இருப்பதற்கும், தற்கொலை செய்து கொள்வதற்கும் காங்கிரஸ் பதில் சொல்ல வேண்டும் எனவும் அவர் ஆவேசமாகக் குறிப்பிட்டார். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.