Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, May 02, 2018

தீராத அன்பு........!! நிதா கரன்

Currently online
நொடியில் உன் முகம்...
பார்த்தேன் 
கைபேசியில் உன்னுடன் பேசி
என் முகம் மறந்தேன்

சின்னச் சினுங்கல்
சின்னச் சண்டை 
எல்லாம் அழகு
உன்னிடம் அன்பே!

எனது மகிழ்ச்சி 
எனது சிரிப்பு 
எனது வாழ்க்கை 
எல்லாம் உன் சொல்லில் அடங்கும்..

அதிகாலை ஆதவன் உதயம் 
உன் குரலில்தானே...! 
எனக்கு ஒவ்வொரு நாளும் 
உன் முத்த வரவில்த்தானே மலரும்..!

கள்ளச் சிரிப்பில் கள்ளுப் போதை
உண்டேன் கள்ளி உன்னிடம்..

காந்தமாக இழுக்கும்..
கண்ணே என்னை ஒவ்வொரு நாளும் 
காதல் மொழி தொடுத்து வெல்கிறாய்

என் வாழ்வில் கிடைத்த வரம் நீயடி
வாழ்வின் அர்த்தம் உன்னிடம் கண்டேன் 
வாழத் துடிக்கிறது மனது

என் வாழ்வின் இன்பமே..!
தினமும் வாழ்வு வேண்டும் 
வையகம் உள்ளவரை உன்னோடு...

   நன்றி 
நிதா கரன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.