Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, May 09, 2018

சீன - வடகொரிய ஜனாதிபதிகள் சந்திப்பு !!

Currently online
சீன ஜனாதிபதி ஜின்பிங்கை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சந்தித்து பேசியுள்ளார்.

சீனாவின் துறைமுக நகரான டாலியனில் வட கொரிய விமானம் தரை இறங்கியதாகவும், அதில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் பயணம் செய்து இருக்கலாம் எனவும் யூகங்கள் எழுந்தன. அது உண்மை என தெரிய வந்துள்ளது.

சீன அதிபர் ஜின்பிங்கை வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், டாலியன் நகரில் நேற்று முன்தினமும், நேற்றும் (திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என சீன அரசின் சி.சி.டி.வி. கூறியது. அவர்கள் கடலோரத்தில் நடந்து கொண்டே பேசியதை அந்த டி.வி. சேனல் காட்டியது.

இந்த சந்திப்பின்போது, ஜின் பிங்கிடம் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் இல்லாத பிரதேசம் ஆக்க வேண்டும், நிரந்தர சமாதானத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற இலக்குகளை அடைவதற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் படிப்படியாக, ஒத்திசைவான நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று கிம் ஜாங் உன் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

அணு ஆயுதங்களை கைவிட்டு, பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை நோக்கிய பயணத்தை தொடங்கி உள்ள கிம் ஜாங் உன்னுக்கு ஜின்பிங் விருந்து அளித்து கௌரவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.