Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, May 05, 2018

சந்திரிகாவின் கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்தாரா?

Currently online
சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் அவரை கொலை செய்ய முயற்சித்த குற்றத்திற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும்படி விடுத்த அவர் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் அவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட மற்றும் உதவிய குற்றத்திற்காக தமிழ் அரசியல் கைதிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தன்னை கொலை செய்ய முயற்சித்த குற்றத்திற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை வெசாக் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு சந்திரிகா, ஜனாதிபதிக்கு கடிதம் எடுதியிருந்தார்.

இந்த விடயம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் சந்திரிக்கா குமாரதுங்க தெரியப்படுத்தியிருந்தார். எனினும், இந்த கோரிக்கைக்கு அமைய இதுவரையிலும், அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் கோரிக்கையினை நிராகரித்துள்ளதன் காரணமாகவே அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.