Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, May 29, 2018

அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தையை காப்பாற்றிய இளைஞனுக்கு கிடைத்த அதிஸ்ரம் !!

Currently online
4-வது மாடியில் அந்தரத்தில் தொங்கிய குழந்தையை மாலியைச் சேர்ந்த இளைஞர், ஸ்பைடர்மேன் போல வெறும் கைகளால் மாடியில் ஏறி காப்பாற்றினார்.

பாரிஸின் வடக்குப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் கடந்த சனிக்கிழமை ஒரு குழந்தை அந்தரத்தில் தொங்கியபடி வீறிட்டு அழுதது. அப்போது குழந்தையின் தாய் வெளியூர் சென்றிருந்தார். தந்தை மட்டும்தான் குழந்தையை பார்த்துக் கொண்டார். அவரும் அந்த வேளையில் வெளியில் சென்றிருந்தார். இதனால் அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து சேரவில்லை. அப்போது மாலியைச் சேர்ந்த மமூது கசாமா (22) அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். இவர் அகதியாக பிரான்ஸில் குடியேறியவர்.

குழந்தையின் அழுகை குரலை கேட்டதும் சற்றும் தாமதிக்காமல் வெறும் கரங்களால் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனி சுவரை தாவிப் பிடித்து ஏறினார். சில நிமிடங்களில் 4-வது மாடிக்கு சென்ற அவர் குழந்தையை பத்திரமாக மீட்டு காப்பாற்றினார். அதற்குள் பக்கத்து வீட்டுக்காரர்களும் பால்கனி வழியாக குழந்தை தொங்கிக் கொண்டிருந்த இடத்துக்கு வந்துவிட்டனர். நீண்ட பதற்றத்துக்குப் பிறகு குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவி வருகிறது. பாரிஸ் மேயர் அனி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில்,
“குழந்தையை காப்பாற்றிய இளைஞர் பாரிஸின் நிஜ ஸ்பைடர்மேன்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், மாலி இளைஞரை அழைத்து பாராட்டினார். அப்போது அவருக்கு நிரந்தர குடியுரிமை மற்றும் தீயணைப்புத் துறையில் அரசு வேலை வழங்கவும் அதிபர் உத்தரவிட்டார். தவிர கசாமாவின் துணிச்சலைப் பாராட்டி பாரிஸ் பொலிஸ் துறையினரும் அவருக்கு பாராட்டு சான்று வழங்கினர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.