Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, May 06, 2018

இலஞ்சத்தை இல்லாதொழிக்க கடுமையான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்!

Currently online
அரச சேவையிலும் ஏனைய சகல துறைகளிலும் காணப்படும் இலஞ்சம், ஊழல், மோசடி என்பவற்றை தடுப்பதற்கும் அவற்றை முற்றாக இல்லாதொழிப்பதற்குமான சகல நடவடிக்கைகளும்  உரிய முறையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார்.

நேற்று(05.05.2018) முற்பகல் பொலன்னறுவை றோயல் கல்லூரியில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல சேவைகள் தின கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மக்களின் கோபத்திற்கும் வெறுப்புக்கும் உள்ளாகும் வகையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் செயற்படக் கூடாது என தெரிவித்ததுடன் சிறந்தவொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரச சேவையிலிருந்து இலஞ்சம் முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் மத்திய வங்கி தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளை உரியவாறு முன்னோக்கி கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதைப் போன்று ஶ்ரீ லங்கன் விமான சேவையில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவும் எதிர்காலத்தில் மிக முக்கியமான தகவல்களை நாட்டிற்கு வெளிப்படுத்தும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் குடும்ப நல சேவை உத்தியோகத்தர்களுக்கான புதிய சீருடையும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் நாட்டின் சுகாதார துறையின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளும் விசேட சேவையை பாராட்டி சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் குடும்ப நல சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி இதன்போது நினைவுப் பரிசில்கள் வழங்கினார். 

அத்துடன் சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அவர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளைப் பாராட்டி சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன  ஜனாதிபதிக்கு விசேட பரிசில் வழங்கினார். சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, வட மத்திய மாகாண ஆளுநர் எம்.பீ. ஜயசிங்க உள்ளிட்ட அதிதிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.